பிக்பாஸின் அடுத்த போட்டியாளர் பவர்ஸ்டார் இல்லை! இவர் தான்!

Last Updated: சனி, 29 ஜூன் 2019 (18:40 IST)
2017-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். தொடர்ந்து மூன்றாவது முறையாக கமல்ஹாசனே இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
 

 
இந்நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் இதுவரை கலந்து கொண்டுள்ளனர். ஆனால் மொத்தம் 17 போட்டியாளர்கள் என்று பிக்பாஸ் ஆரம்பத்திலேயே கூறியிருந்தார்.அந்தவகையில் அடுத்ததாக யார் வருவார் என எதிரிபார்க்கப்பட்டு வந்த நிலையில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக மீடியாக்களில் பேசப்பட்டு வந்தது. 
 
ஆனால் தற்போது தங்களுக்கு நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து கிடைத்துள்ள தகவல் என்னவென்றால், அந்த 17வது போட்டியாளராக பிரபல செய்தி வாசிப்பாளர் பனிமலர் பிக்பாஸ் வீட்டினுள் செல்லவுள்ளதாக மிகவும் நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. எனவே கூடிய விரைவில் இவரை பிக்பாஸ் வீட்டில் பார்க்கலாம்.


இதில் மேலும் படிக்கவும் :