திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 4 ஏப்ரல் 2022 (13:11 IST)

இத்தனை கார் இருக்கும்போது ஏன் சைக்கிள்ல்ல போனிங்க: விஜய்யிடம் கேள்வி எழுப்பிய நெல்சன்

நான்கு கார்கள் இருக்கும் போது ஏன் சைக்கிளில் சென்றீர்கள் என விஜய்யிடம் இயக்குனர் நெல்சன் கேள்வி கேட்ட வீடியோ வைரலாகி வருகிறது. 
 
பீஸ்ட் படத்தின் புரமோஷன் பணிகளில் ஒன்றாக விஜய்யிடம் பேட்டி எடுக்கும் நெல்சன் குறித்த நிகழ்ச்சி வரும் பத்தாம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது 
இதற்கான புரமோஷன் வீடியோக்கள் வெளியாகி வரும் நிலையில் சற்று முன் வெளியான வீடியோவில் நான்கு கார்கள் இருக்கும் போது ஓட்டு போடுவதற்கு ஏன் சைக்கிளில் சென்றீர்கள் என்ற கேள்வியை நெல்சன் கேட்டார்
 
 அதற்கு சிரித்துக்கொண்டே பதில் சொல்லாமல் அடுத்த கேள்விக்கு செல்லலாம் என்று விஜய் கூறினார். சமீபத்தில் நடந்த தேர்தலில் ஓட்டுபோட விஜய் சைக்கிளில் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே