செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 18 நவம்பர் 2018 (19:07 IST)

ஏ.ஆர்.ரஹ்மான் - ஷாருக்கான் இணைந்து நடித்த பாடலின் டீசர் இதோ:

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்காக தனிப்பாடல் ஒன்றை கம்போஸ் செய்து இயக்கி வருகிறார் என்று ஏற்கனவே செய்தி வெளிவந்த நிலையில் இந்த பாடலின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

இந்த பாடலில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் ஏ.ஆர்.ரஹ்மானும் தோன்றியுள்ளார். 'ஜெய் ஹிந்த் ஹிந்த், ஜெய் இந்தியா என்று தொடங்கும் இந்த பாடல் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியை புரமோஷன் செய்ய பயன்படுத்தப்படவுள்ளது. தற்போது இந்த பாடலின் டீசர் வெளிவந்துள்ள நிலையில் விரைவில் முழுப்பாடலும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி இம்மாதம் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என்பது குறிப்ப்பிடத்தக்கது