1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 8 அக்டோபர் 2020 (13:22 IST)

4 நாட்களில் ரூ.10 கோடி வசூலா? ’க/பெ ரணசிங்கம்’ ஓடிடி வசூல்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ’க/பெ ரணசிங்கம்’ என்ற திரைப்படம் கடந்த 2ஆம் தேதி ஓடிடியில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த திரைப்படத்தை கிட்டத்தட்ட நான்கு லட்சத்து 70 ஆயிரம் பேர் பணம் செலுத்தி ஓடிடியில் பார்த்து உள்ளதாகவும் இதனை அடுத்து இந்த படத்தின் வசூல் கிட்டத்தட்ட 10 கோடி அளவிற்கு ஓடிடி மூலம் கிடைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது
 
மேலும் இந்த படத்தின் மற்ற மொழிகளின் பதிப்புகள் நாளை முதல் ஓடிடியில் வெளியாக இருப்பதாகவும் அதில் இருந்து ஒரு பெரிய தொகை ஓடிடிக்கு கிடக்கும் என்றும் கூறப்படுகிறது எனவே கடந்த சில மாதங்களாக ஓடிடியில் வெளியான படங்கள் அனைத்தும் திருப்தியான வசூலை கொடுக்காத நிலையில் முதல் முறையாக விஜய் சேதுபதியின் ’க/பெ ரணசிங்கம்’ திரைப்படம் ஓடிடி குழுவினர்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து ஓடிடியில் ரிலீஸ் செய்ய பெரிய நடிகர்களின் படங்களும் முயற்சித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ’க/பெ ரணசிங்கம்’ படத்தை அடுத்து ‘சூரரைப்போற்று திரைப்படமும் மிகப்பெரிய தொகையை வசூலித்து கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது