1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 1 மார்ச் 2019 (21:43 IST)

நயன்தாராவின் ஜிந்தாகோ பாடல் வீடியோ வெளியானது

லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் நயன்தாரா நடித்துள்ள ஐரா படத்தில் இருந்து ஜிந்தாகோ பாடல் வெளியாகி உள்ளது.


 
கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் கோத்தபாடி ராஜேஷ் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து  தயாரித்துள்ள இந்த படத்தில் நயன்தாராவுடன் கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  கே. எஸ் சுந்தமூர்த்தி இசையமைத்துள்ளார். 
 
இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் மேகதூதம் என்ற பாடல் பிப்ரவரி 5ம் தேதி வெளியிட்டனர். இரண்டாவது பாடல் காரிகா சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இப்போது மீதமுள்ள ஒரு ஒரு பாடலான ஜிந்தகோ  தற்போது வெளியாகி உள்ளது.
 
மாரச் 28ம் தேதி ஐரா படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.