வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 16 நவம்பர் 2022 (15:40 IST)

நயன்தாராவின் பிறந்தநாளில் வெளியாகும் கனெக்ட் டீசர்!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதிகளுக்கு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அது தொடர்பான சர்ச்சைகள் இப்போது ஓய்ந்துள்ள குழந்தைகளோடு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து இருவரும் வீடியோ வெளியிட்டு இருந்தனர்.

திருமணத்துக்குப் பிறகு  நயன்தாரா தன் கணவர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் கனெக்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் வினய் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை மாயா மற்றும் கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்குகிறார்.

இந்நிலையில் இப்போது கனெக்ட் படத்தின் முழுவதும் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து நயன்தாராவின் பிறந்த நாளான நவம்பர் 18 ஆம் தேதி இந்த படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.