நயன்தாராவின் 75 ஆவது படத்தின் ஷூட்டிங் பற்றி வெளியான தகவல்!
திருமணத்துக்குப் பிறகு நயன்தாரா கொஞ்ச காலம் ஓய்வெடுத்துக் கொண்டு இப்போது மீண்டும் பிஸியாக நடிக்க தொடங்கியுள்ளார்.
நயன்தாராவின் 75 ஆவது படம் என்ற பெருமையுடன் சமையல் பற்றி ஒரு படம் பற்றிய அப்டேட் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தில் ஜெய் உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். ஜி ஸ்டுடியோஸ் பைனான்ஸில் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில் இந்த படம் தற்போது ஷூட்டிங் தொடங்க உள்ளது. இந்த படத்துக்காக 35 நாட்கள் தொடர்ந்து தேதிகள் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.