புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : புதன், 8 ஜனவரி 2020 (14:28 IST)

காதல் முறிவா...? எப்பவும் நயன்தாரா தான் - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்னேஷ் சிவன்!

தமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் காதலிப்பது மட்டுமல்லால் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்துவிடுவார்கள். 
 
இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் அளப்பறைகளை பார்க்கும் சமூக வலைதளவாசிகள் சிங்கிள் பசங்க சாபம் உங்களை சும்மா விடாது என கடுப்பாகின்றனர். அந்த அளவிற்கு லூட்டியடிக்கும் இந்த ஜோடி புறாக்கள் திருமணத்தை பற்றி மூச்சு விடாமல் கமுக்கமாக இருக்கிறார்கள். ஆனால் ஊர்சுற்றும் நெருக்கமான புகைப்படங்கள் மட்டும் அவ்வப்போது வெளியாகி பலரையும் புகைய வைத்துவிடுகிறது. மேலும் எந்த விருது விழாக்களுக்கும் ஜோடியாக சேர்ந்து வந்து ரசிகர்களுக்கு கணவன் மனைவியாகவே பாவிப்பார்கள். 
 
ஆனால், கடந்த ஞாயிற்று கிழமை ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்திய zee cine awards 2020 விருது விழாவில் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் இன்றி தனியாக வந்து பங்கேற்றார். இதனால் மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளான ரசிகர்கள் நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல் உறவில் பிறவு ஏற்பட்டு விட்டதாக வதந்திகளை பரப்பினர். இந்நிலையில் தற்போது வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படமொன்றை விக்னேஷ் சிவன் தந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகரகள் பெரு மூச்சு விட்டு சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்கோங்க ப்ளீஸ் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.