நான் கன்னங்களில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேனா?... நயன்தாரா அளித்த பதில்!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினாக லேடி சூப்பர் என்ற அந்தஸ்தில் இருக்கிறார். மலையாள படமான மனசினகரே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா அதன் பின்னர் தமிழில் ஐயா படத்தில் அறிமுகமானார்.
அதன் பின்னர் சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஜோடியான அவர் அதன் பின்னர் முன்னணி நடிகையாகி முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் படங்களில் நடித்தார். அடிக்கடி காதல் கிசுகிசுக்களில் சிக்கி புகழ் வெளிச்சத்தில் இருந்த நயன்தாராவுக்கு வெற்றிப் படங்களும் தொடர்ந்து அமைந்தன.
மாயா, அறம், கோலமாவு கோகிலா போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து லேடி சூப்பர்ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்தார். இதுவரை 75 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் இப்போது ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேனா என்பது குறித்து பேசியுள்ளார்.
அதில் “என் உடல் எடையில் பல மாற்றங்கள் நடந்தன. நான் பொதுவாக நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கு முன்னர் கண் புருவங்களை மட்டும் திருத்திக் கொள்வேன். அதுதான் என் முகத்தில் மாற்றமாக தெரியும். என் கன்னத்தை நீங்கள் கிள்ளி வேண்டுமானாலும் பார்க்கலாம். அல்லது எரித்தும் பார்க்கலாம். நான் பிளாஸ்டிக் சர்ஜரி எதுவும் செய்துகொள்ளவில்லை” எனக் கூறியுள்ளார்.