1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : சனி, 30 நவம்பர் 2019 (12:31 IST)

முக்குத்தி அம்மன் படத்திற்கு தான் அசைவ விரதமா? அப்போ இது என்ன...?

தமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் காதலிப்பது மட்டுமல்லால் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்துவிடுவார்கள்.           
 
இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் அளப்பறைகளை பார்க்கும் சமூக வலைதளவாசிகள் சிங்கிள் பசங்க சாபம் உங்களை சும்மா விடாது என கடுப்பாகின்றனர். அந்த அளவிற்கு லூட்டியடிக்கும் இந்த ஜோடி புறாக்கள் திருமணத்தை பற்றி மூச்சு விடாமல் கமுக்கமாக இருக்கிறார்கள். ஆனால் ஊர்சுற்றும் நெருக்கமான புகைப்படங்கள் மட்டும் அவ்வப்போது வெளியாகி பலரையும் புகைய வைத்துவிடுகிறது. 
 
மேலும் இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வசிப்பதாகவும் செய்தி வெளியாகி கோலிவுட்டில் கிசு கிசுக்கப்பட்டது. அடிக்கடி டேட்டிங் செல்லும் இவர்கள் சமீபத்தில் நயன்தாராவின் பிறந்தநாளை நியூயார்க் நகரில் கொண்டாடினர். அப்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்து வைரலானாது. இதற்கிடையில் நயன்தாரா அசைவ உணவு சாப்பிடாமல் விரதம் இருப்பதாக தகவல் வெளியானது. அதுவும் திருமணத்திற்காக தான் விரதம் இருப்பதாகவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. 
 
இந்நிலையில் தற்போது நயன் விரதம் இருப்பதாக கூறியது மூக்குத்தி அம்மன் படத்தில் நடிப்பதற்காக என்பது தெரியவந்துள்ளது. ஆனால், விக்னேஷ் சிவன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தில் டர்கிஷ் சிக்கன் அளித்ததற்கு நன்றி என்று குறிப்பிட்டிருந்தார். அவர் பதிவிட்டிருந்த அந்த புகைப்படத்தில் இருப்பது நயன்தாரா எனவும் நெட்டிசன்ஸ் சிலர் கமென்ஸ்ட் செய்து வருகின்றனர். மூக்குத்தி அம்மன் படத்திற்காக நயன்தாரா அசைவம் சாப்பிடாமல் விரதம் இருப்பதாக அறிவித்த நிலையில் இந்த புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.