வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 30 நவம்பர் 2019 (12:30 IST)

’மூக்குத்தி அம்மன்’ படத்தில் இணைந்த மேலும் ஒரு நாயகி!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்று ’மூக்குத்தி அம்மன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கி உள்ள நிலையில் இந்த படத்தில் நயன்தாரா முதல் முறையாக அம்மன் வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த வேடத்தில் நடிப்பதற்காக அவர் விரதம் இருந்து வருவதாக கூறப்பட்டு அதன் பின்னர் அந்த செய்தி நயன்தாரா தரப்பினரால் மறுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படத்தில் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிக்க உள்ள நிலையில் மற்றொரு நாயகி தற்போது இணைந்துள்ளார். அருண்விஜய் நடித்த ’தடம்’ படத்தின் நாயகியான ஸ்மிருதி வெங்கட் என்பவர் தான் இன்னொரு நாயகி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அனேகமாக இந்த படத்தில் நாயகனாக நடிக்கும் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
மேலும் இந்த படத்தில் பழம்பெரும் நடிகரும் இயக்குனருமான மெளலி மற்றும் நடிகை ஊர்வசி ஆகியோரும் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆர்ஜே பாலாஜி கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று கன்னியாகுமரி தொடங்கியுள்ளதாகவும், கன்னியாகுமரி மாவட்டத்தை சுற்றி பல இடங்களில் இன்னும் ஒரு மாத காலம் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நயன்தாரா கலந்து கொள்வார் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்