வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cm
Last Updated : செவ்வாய், 22 மே 2018 (20:43 IST)

4 நாட்களில் நயன்தாரா வீடியோவை ரசித்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

4 நாட்களில் நயன்தாரா வீடியோவை 5.5 மில்லியன் மக்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

 
 
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோலமாவு கோகிலா’. சுருக்கமாக ‘கோ கோ’.நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்தப் படம், ஹீரோயினுக்கு முக்கியத்துவம்கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது. சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா மற்றும் ஜாக்குலின் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 
லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, அனிருத்ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். ‘இதுவரையோ’ மற்றும் ‘கல்யாண வயசு’ என இதுவரை 2பாடல்கள் இந்தப் படத்தில் இருந்து ரிலீஸாகியிருக்கின்றன.
 
இதில், ‘கல்யாண வயசு’ பாடல் 4 நாட்களுக்கு முன்னர் வெளியானது. இந்தப் பாடலுக்கு வரிகள் எழுதி, முதன்முறையாகப் பாடலாசிரியர் ஆகியிருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த வீடியோ வெளியான 4 நாட்களில் 5.5 மில்லியன் மக்கள் பார்த்து ரசித்துள்ளனர். நயன்தாரா மற்றும் யோகிபாபு இருவரும் இந்தப் பாடலில்இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.