யோகிபாபுவுக்கு படங்களை பரிந்துரை செய்யும் நயன்தாரா!
தமிழ் சினிமாவில் தற்போது காமெடியன்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. காமெடி நடிகர்கள் சிலர் தற்போது நாயகனாகவும், படத்தின் நாயகனுக்கு இணையான கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.
இவருக்கு இப்படியொரு மார்க்கெட் கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பிஸியாக இருக்கிறார் காமெடி நடிகர் யோகி பாபு. இவர் நயன்தாராவுடன் கல்யாண வயசு பாடலில் நடித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இதனால், யோகி பாபுவிற்கு முக்கிய கதாபாத்திரம் வழங்க நயன்தாரா பரிந்துரை செய்துள்ளாராம். ஆம், கே.எம்.சர்ஜுன் இயக்கும் புதிய படத்தில் யோகி பாபுவிற்கு முக்கிய கதாபாத்திரம் அளிக்க நயன்தாரா பரிந்துரை செய்துள்ளார்.
யாருக்கும் பெரிதாக சிபாரிசு செய்யாத நயன்தாரா தனது காதலருக்காக சில முயற்சிகளை செய்தார். அதனை தொடர்ந்து யோகிபாபுவுக்கு சிபாரிசு செய்வது சினிமா வட்டாரத்தில் மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.