1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (13:25 IST)

விக்கி ஏன் அவ்வளவு முக்கியம்? பல நாள் ரகசியத்தை உடைத்த நயன்தாரா?

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் சொந்த பிரச்சனைகள் பல சந்தித்து வேதனைகள் கடந்து இந்த வெற்றிடத்தை பிடித்துள்ளார். இன்று அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. விக்னேஷ் சிவனை காதலித்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வரும் நயன்தாரா திருமணத்தை பற்றி மூச்சு விடாமல் இருந்து வருகிறார். 
 
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் நேற்று டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக  கலந்துக்கொண்டு பல சுவாரஸ்யமான அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அப்போது " நீங்கள் நிச்சயம் திருமணம் செய்துக்கொள்வீர்களா அல்லது லிவிங் டூ கெதர் வாழ்க்கை முறையை பின்பற்றுவீர்களா? என கேட்டதற்கு, நிச்சயம் திருமணம் செய்துக்கொள்வேன். 
 
திருமணத்தை எல்லோருக்கும் சொல்லவில்லை என்றாலும் திருமணத்திற்கு பிறகு அனைவருக்கும் அதை தெரிவிப்பேன் என்றார். என் வாழ்க்கையில் விக்னேஷ் சிவன் வந்த பிறகு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தது. புதிய படங்ககளில் நடிக்க அவர் என்னை தினம் தினம் ஊக்குவிக்கிறார் என பெருமிதத்தோடு கூறினார்.