1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 14 ஆகஸ்ட் 2021 (15:54 IST)

அதுவே சுமார் படம்தான்.. அத இன்னும் சுமாரா ரீமேக் பண்ணிருக்காங்க… ப்ளு சட்ட மாறனின் விமர்சனம்!

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் “நெற்றிக்கண்”. இந்த படத்தை மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இதில் நயன்தாராவுடன் அஜ்மல், மணிகண்டன், சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிரிஸ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இந்த படம் கொரிய திரைப்படமான ப்ளைண்ட்டின் ரீமேக்.

இந்த படம் நேற்று ரிலீஸான நிலையில் பெரிய அளவில் எந்த வரவேற்பையும் பெறவில்லை. அதுபோல விமர்சனங்களும் நெகட்டிவ்வாகவே வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பிரபல தமிழ் விமர்சகரான ப்ளு சட்ட மாறன் ‘நெற்றிக்கண் படத்தின் மூலமான பிளைண்ட் படமே சுமாரானதுதான். அதையும் இவர்கள் இன்னும் சுமாரா ரீமேக் செய்து வைத்திருக்கிறார்கள்’ எனக் கூறியுள்ளார்.