சினிமாவில் உச்சம்… ஆனால் அரசியலில் முட்டைதான் – கமலை சீண்டிய பயில்வான்!
நடிகரும் மூத்த பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் கமல்ஹாசனின் அரசியல் வாழ்க்கையை சீண்டும் விதமாக பேசியுள்ளார்.
சினிமா நகைச்சுவை நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் சினிமா நடிகர் நடிகைகளைப் பற்றிய கிசுகிசுக்களைப் பேசி அதன் மூலம் யுட்யுப் சேனல்களில் பார்வையாளர்களை ஈர்த்து வருகிறார். இவர் பேசும் கிசுகிசுக்கள் மற்றும் நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை சம்மந்தமான செய்திகளுக்காக இவருக்கு ஒரு பெரிய பாலோயர்ஸ் கூட்டம் உள்ளது.
இந்நிலையில் கமலைப் பற்றி பேசியுள்ள அவர் கமல் சினிமாவில் வேண்டுமானால் உச்சம் தொட்டு இருக்கலாம். ஆனால் அரசியலில் அவர் முட்டைதான். இரண்டு படம் ஹிட் ஆனால் அவர் அரசியலில் மூட்டைக் கட்டி வைத்து விட்டு சினிமாவில் இறங்கி விடுவார் எனக் கூறியுள்ளார்.