செவ்வாய், 2 ஜூலை 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 21 டிசம்பர் 2021 (15:41 IST)

நயன்தாரா படத்தின் வியாபாரம் இத்தனை கோடியா? கல்லா கட்டிய எஸ் ஆர் பிரபு!

நயன்தாரா நடிப்பில் எஸ் ஆர் பிரபு தயாரித்து வரும் 02 படத்தின் வியாபாரம் மலைக்க வைக்கும் அளவுக்கு நடந்துள்ளது.

நயன்தாரா டிரீம் வாரியர்ஸ் நிறுவனத்துக்காக நடிக்கும் படத்தை வெங்கட் பிரபுவின் உதவியாளர் விக்னேஷ் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து முடிந்துள்ளத்யு. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரு பேருந்துக்குள் நடப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ளதாம். அதற்காக ஒரு பேருந்தை வாங்கி சிக்கனமாக படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார் இயக்குனர். இந்த படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் இப்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்துக்கு ஆக்ஸிஜன் என்பதைக் குறிக்கும் O2 என பெயர் வைத்துள்ளார்களாம். விரைவில் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தை 10 கோடி ரூபாய்க்குள் எடுத்து சுமார் 22 கோடி ரூபாய்க்கு பிஸ்னஸ் செய்துள்ளாராம் எஸ் ஆர் பிரபு. இந்த படம் ஓடிடியில் வெளியாகும் என தெரிகிறது.