ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 9 மார்ச் 2024 (08:16 IST)

நயன்தாரா நடிக்கும் மண்ணாங்கட்டி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா திருமணத்துக்குப் பின்னர் நடித்த படங்கள் எதுவும் ஹிட்டாகவில்லை. சமீபத்தில் அவர் நடிப்பில் ரிலீஸ் ஆன அன்னபூரணி படுதோல்வி படமாக அமைந்தது. இந்நிலையில் இப்போது புதிதாக மண்ணாங்கட்டி என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார்.  இந்த படத்தை சர்தார் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் நயன்தாராவோடு யோகி பாபு, தேவதர்ஷினி மற்றும் நரேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  இந்த படத்தை பிளாக்‌ஷீப் யுட்யூப் சேனலில் நிகழ்ச்சிகளை வழங்கிய ட்யூட் விக்கி இயக்கி வருகிறார். இந்த படத்தின் கதைக்களம் ஊட்டியில் நடப்பது போல உருவாக்கப்பட்டது. ஆனால் நயன்தாரா ஊட்டிக்கு வர முடியாது என சொல்லிவிட்டதால் சென்னையிலேயே  திராட்சை தோட்டம் செட் ஒன்றை அமைத்து படமாக்கி வருகின்றனர்.

ஆனால் இப்போது சென்னையிலேயே செட் போடப்பட்டதற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. ஏனென்றால் கதைப்படி அந்த திராட்சைத் தோட்டம் இறுதியில் எரிவது போல காட்சிகள் உள்ளதாம். அதை ஊட்டியில் படமாக்க முடியாது என்பதால் சென்னையில் செட் போட்டு படமாக்கியுள்ளார்களாம். விரைவில் படத்தின் ஷூட்டிங் மொத்தமாக முடியவுள்ளதாக சொல்லப்படுகிறது.