1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Aadivelli movie remake plans with nayanthara

90ஸ் பிளாக்பஸ்டர் ஹிட் ஆடிவெள்ளி ரீமேக் திட்டம்.. ஹீரோயின் இவரா?

ஆடிவெள்ளி
தமிழ் சினிமாவில் பேய்ப் படங்கள், சாமி படங்கள் என வரிசையாகக் கொடுத்து ஹிட்டடித்தவர் இயக்குனர் மற்றும் ராம நாராயணன். அவர் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன திரைப்படம் ஆடிவெள்ளி. இந்த படத்தில் நடிகை சீதா அம்மன் பக்தையாக நடித்திருந்தார்.

இந்த படத்தை பார்த்த பெண்கள் பலருக்கு திரையரங்கிலேயே சாமி வந்து ஆடியதால் அது பெரும் பேசு பொருளாகியது. ஆனால் படத்தை ப்ரமோட் செய்ய வேண்டுமென்றே தயாரிப்பாளர் காசு கொடுத்து சில பெண்களை சாமி வந்தது போல ஆட சொன்னதாகவும் அப்போது தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இப்போது 34 ஆண்டுகள் கழித்து ஆடிவெள்ளி திரைப்படத்தை ரீமேக் செய்ய உள்ளாராம் மறைந்த ராம நாராயணனின் மகன் முரளி ராமசாமி. இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே நயன்தாரா மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் அம்மன் வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அடுத்த கட்டுரையில்
விஜய்யின் கடைசி படத்தை இயக்கப் போவது… ரசிகர்கள் ஆர்வம்!