1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 9 ஜூன் 2021 (11:46 IST)

சித்ஸ்ரீராம் காந்தக்குரலில் ‘இதுவும் கடந்து போகும்’: ‘நெற்றிக்கண்’ சிங்கிள் ரிலீஸ்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தின் சிங்கிள் பாடல் இன்று காலை 9 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தனர். அதன்படி இந்த பாடல் இன்று வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது
 
கிருஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை காந்தக்குரலோன் சித்ஸ்ரீராம் பாடியுள்ளார். இந்த பாடலை கார்த்திக் நீதா என்பவர் இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் மெலடியாக அமைந்துள்ள இந்த பாடலை முதல் முறை கேட்கும்போதே சூப்பராக இருப்பதாகவும் திரும்பத் திரும்ப கேட்க தூண்டுவதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த பாடல் நிச்சயம் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
நயன்தாரா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். நயன்தாரா இந்த படத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார் என்பதும் அவருடைய நடிப்புக்கு சவால் விடும் வகையில் பல காட்சிகள் இந்த படத்தில் இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.