1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 17 நவம்பர் 2019 (08:55 IST)

கொரியன் படத்தில் ரீமேக்கில் நயன்தாரா & சோனம் கபூர் !

கொரியன் படமான பிளைண்ட் படத்தின் ரீமேக்கில் நயந்தாராவும் சோனம்கபூரும் நடிக்க இருக்கின்றனர்.

தமிழில் நயன்தாரா நடிப்பில் நெற்றிக்கண் என்ற திரைப்படம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. இந்த படம் 2011 ஆம் ஆண்டு உருவான கொரியன் படமான பிளைண்ட் (blind) படத்தின் அதிகார்ப்பூர்வ ரீமேக்காகும். இந்த படத்தை ரவுடி பிக்ஸர்ஸ்சார்பாக நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தயாரித்து வருகிறார்.

இதே படத்தை இந்தியிலும் ரீமேக் செய்து சோனம் கபூர் நடிக்க இருக்கிறார். இந்தியில் இந்த படத்தை கஹானி படத்தை இயக்கிய சுஜோய் கோஷ் இந்தப் படத்தைத் தயாரிக்க ஷோமி மகிஜா  இயக்குகிறார்.