தவித்த காதலன் விக்னேஷ் சிவனுக்கு தண்ணி ஊற்றிய நயன்தாரா!

Last Updated: செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (16:28 IST)
தமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் காதலிப்பது மட்டுமல்லால் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்து பலரையும் வெறுப்பேற்றி வருகின்றனர். 


 
இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் அளப்பறைகளை பார்க்கும் சமூக வலைதளவாசிகள் சிங்கிள் பசங்க சாபம் உங்களை சும்மா விடாது என கடுப்பாகின்றனர். அந்த அளவிற்கு லூட்டியடிக்கும் இந்த ஜோடி புறாக்கள் திருமணத்தை பற்றி மூச்சு விடாமல் கமுக்கமாக இருக்கிறார்கள். ஆனால் ஊர்சுற்றும் நெருக்கமான புகைப்படங்கள் மட்டும் அவ்வப்போது வெளியாகி பலரையும் புகைய வைத்துவிடுகிறது. 
 
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா ‘நானும் ரௌடி தான்’ படத்தில் நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு காதலியை பொத்தி பொத்தி பத்திரப்படுத்துவதிலேயே பிசியாகிவிட்ட  விக்னேஷ் சிவன் கெரியரில் கோட்டை விட்டுவிட்டார்.கொஞ்சம் கேப் வந்ததால் ஓட்டை சட்டியில் ஊற்றிய எண்ணெய் போல வளர்ந்த வேகத்தில் பின்தங்கிவிட்டார் விக்னேஷ் சிவன்.  பின்னர்  சூர்யாவின் தானா கூட்டம் படத்தை இயக்கிய அவர், அதற்கு பிறகு  எந்த படமும் இல்லாமல் வெட்டியாக இருந்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது காதலி நயன்தாரா நடிக்க இருக்கும் புதிய படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்கஉள்ளாராம். இந்த படத்தை இயக்குனர் மிலந்த் இயக்கவுள்ளார். மிலந்த்  கடந்த  2017 ல் "அவள்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


 
தவித்த வாய்க்கு தண்ணி ஊற்றும் விதமாக படவாய்ப்பு ஏதும் இல்லாமல் தவித்த காதலனுக்கு இப்படத்தின் மூலம் தயாரிக்கும் பொறுப்பை நடிகை நயன்தாரா தான் விக்னேஷ் சிவனுக்கு கொடுத்துள்ளாராம். ஆக இப்படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :