1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 31 அக்டோபர் 2019 (12:51 IST)

அசுரன் ஹிந்தி ரீமேக்கில் ஷாருக்கான்? இதுக்கு அவர் செட் ஆவாரா..?

வடசென்னை படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் வெளிவந்து வெற்றிநடை போட்டு வரும் படம் அசுரன். பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாக வைத்து உருவாகிய இத்திரைப்படம் கடந்த 4ம் தேதி வெளிவந்தது. 
படம் வெளியான முதல் நாளிலிருந்தே பாராட்டு மழையில் நனைந்து வரும் அசுரன் . விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் நல்ல வரவேற்பை  பெற்றுள்ளது. சிவ சுவாமி கதாபத்திரத்தில் தனுஷின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்திருந்தார். இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. 
 
இந்நிலையில் தற்போது இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் தனுஷின் கதாபாத்திரத்தில் நடிகர் ஷாருக்கான் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அசுரன் படத்தை பார்த்து அவர் வியந்துவிட்டாராம். மேலும், இப்படத்தில் நடிக்க ஷாருக்கான் க்ரீன் சிக்னல் கட்டியுள்ளாராம்.  ஆனால். இந்த படத்தை இயக்குவது யார் என்ற தகவல் வெளியாகவில்லை. எனவே கூடிய விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.