1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 9 மே 2024 (06:51 IST)

பாலிவுட் ஹீரோயின்களை ஓரம்கட்டும் அளவு சம்பளம் … யாஷ் படத்தில் நடிக்க கண்டீஷன் போடும் நயன்தாரா!

யாஷ் நடிப்பில் கே ஜி எஃப் 2 ரிலிஸாகி கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில் இன்னும் தனது அடுத்த படத்தின் ஷூட்டிங்கை யாஷ் தொடங்கவில்லை. இது அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் அவர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் என்ற படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. கேவிஎன் ப்ரடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கே ஜி எஃப் மற்றும் கேஜிஎப் 2 ஆகிய இரண்டு படங்களை அடுத்து யாஷ் நடிக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. கதை கேட்ட அவர் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அவர் படத்தில் யாஷின் சகோதரி வேடத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது. முதலில் இந்த வேடத்தில் நடிக்க பாலிவுட் நடிகை கரீனா கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இப்போது அவர் விலகவே நயன்தாரா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு 20 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை எந்தவொரு தென்னிந்திய நடிகையும் வாங்காத சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது.