1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (11:09 IST)

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ பர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது தெரியுமா?

நயன்தாரா நடித்துவரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸாகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.
சிம்பு, ஹன்சிகாவை வைத்து ‘வேட்டை மன்னன்’ படத்தை இயக்கியவர் நெல்சன் திலீப்குமார். என்ன காரணத்தினாலோ அந்தப் படம் பல வருடங்களாக பாதியிலேயே நிற்கிறது. இந்நிலையில், நயன்தாராவை வைத்து ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தை இயக்கி வருகிறார் நெல்சன். இந்தப் படத்தை, லைகா  நிறுவனம் தயாரிக்கிறது.
 
இந்தப் படத்தில், நயனுடன் சேர்ந்து சரண்யா பொன்வண்ணன், யோகிபாபு, விஜய் டிவியின் ‘கலக்கப்போவது யாரு’ பிரபலங்கள் ஜாக்குலின் மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோரும் நடித்துள்ளனர். அனிருத், இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
 
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மார்ச் மாதம் 5ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவித்துள்ளனர். மேலும், மார்ச் 8ஆம் தேதி ஒரு பாடலையும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.