புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 7 மே 2019 (15:12 IST)

சிவகார்த்திகேயன் - பாண்டிராஜ் படத்தில் மேலும் 2 ஹீரோக்கள்

சிவகார்த்திகேயனின் 16வது படமான சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் அப்டேட்டுக்கள் ஒருசில மணி நேரத்திற்கு ஒருமுறை வெளிவந்து கொண்டிருப்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த படத்தில் டி.இமான், அனு இமானுவேல், ஐஸ்வர்யா  ராஜேஷ், சூரி, யோகிபாபு ஆகியோர்கள் இணைந்தனர் என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது 'சதுரங்க வேட்டை' உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்த நட்டி நட்ராஜூம், 'பில்லா பாண்டி' போன்ற படங்களில் நடித்த ஆர்.கே.சுரேஷும் இந்த படத்தில் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது
 
பாண்டிராஜ் இயக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனோடு சேர்ந்து மேலும் இரண்டு ஹீரோக்கள் நடிக்கவுள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு எகிறி கொண்டே உள்ளது. இன்னும் யார் யாரெல்லாம் இந்த படத்தில் இணைய போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்