வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (18:42 IST)

தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ் - புகழாரம் சூட்டும் பிரபலங்கள்!

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து கடந்த ஆண்டு வெளியான 'மகாநடி' திரைப்படம், தெலுங்கில் தேசிய விருதை பெற்றுள்ளது. 

 
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக பார்க்கப்படுகிறார். காரணம் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாககொண்டு தெலுங்கில் எடுக்கப்பட்டு, தமிழில் டப் செய்யப்பட்ட நடிகையர் திலகம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இன்னொரு சாவித்ரி இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை இன்றைய தலைமுறையினருக்கு சொல்லுமளவிற்கு அவ்வளவு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். 
 
இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடித்ததற்காக, நடிகை கீர்த்தி சுரேஷூக்கு, இந்தாண்டின் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. 66வது தேசிய விருதுகள் வெள்ளிக்கிழமை ( ஆகஸ்ட் 9ம் தேதி) அறிவிக்கப்பட்டது.  அப்போது சிறந்த நடிகையாக  கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த தமிழ் படமாக பாரம் தேர்வானது .
 
தேசிய விருது வென்று தென்னிந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்த கீர்த்தி சுரேஷிற்கு திரை பிரபலங்ககள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.