1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 1 ஜூன் 2019 (15:41 IST)

ஐய்யோ... கீர்த்தி சுரேஷா இது?? ப்ளீஸ் ப்ரே ஃபார் கீர்த்தி!

கீர்த்தி சுரேஷ் பாலிவுட் திரையுலகில் புதுப்படமொன்றில் அறிமுகமாவிருக்கிறார். இதற்காக தனது உடல் எடையை குறைத்துள்ளார். 
 
தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான நடிகையாக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ். 
 
தற்போது பாலிவுட் திரையுலகில் புதுப்படமொன்றில் அறிமுகமாவிருக்கும் அவர், ஸ்லிம்மாக மாற கடும் வொர்க் அவுட் மேற்கொண்டு தனது உடல் எடையை முற்றிலுமாக குறைந்துள்ளார். அதோடு புகைப்படமும் வெளியாகியுள்ளது. 
கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை கண்ட அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது உள்ள அவரது உடலமைப்பு கீர்த்திக்கு சுத்தமாக செட்டாகவில்லை என வருத்தம் தெரிவித்துள்ணனர். 
 
கீர்த்தி சுரேஷின் பாலிவுட் படத்தை போனி கபூர் தயாரிக்க உள்ளார். ‘பதாய் ஹோ’ படத்தின் இயக்குனர் அமித் ஷர்மா இப்படத்தை இயக்க உள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.