திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 12 ஜூன் 2019 (12:40 IST)

ஆத்தாடி கீர்த்தி சுரேஷா இது? சீக்கு வந்த கோழி போல் ஆகிட்டியேம்மா- புலம்பும் ரசிகர்கள்!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிரியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகையாக வலம் வரும்  கீர்த்தி சுரேஷ். குறிப்பாக 'நடிகையர் திலகம்' படத்தின் வெற்றிக்கு பிறகு இவரை புக் பண்ண பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வருகிறார்கள் .
 
விஜய், விக்ரம், சூர்யா,தனுஷ் என்று முன்னணி  தென்னிந்திய நடிகர்கள் அனைவருடனும் நடித்து  முன்னணி நடிகையாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் பக்கம் தாவிவிட்டார். முதன் முதலாக இந்தியில் அறிமுகமாகும் முதல் படத்திலேயே பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடிக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க உள்ள இந்தப் படத்தை ‘பதாய் ஹோ’ படத்தின் இயக்குனர் அமித் ஷர்மா இயக்க உள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்தது. 
 
பாலிவுட்டில் கால் பதித்தும் அக்கட தேசத்தில் உள்ள நடிகைகளை போன்றே கீர்த்தியும் தன்னை மெருகேற்றி வருகிறார். பாலிவுட் நடிகைகள் என்றாலே ஒல்லி பெல்லி இடுப்பழகை கொண்டு ஸ்லிம் பியூட்டியாக வலம் வருவார்கள். அப்படிப்பட்ட நடிகைகளுக்கு அக்கட தேசத்தில் வேற லெவல் வரவேற்பு கிடைக்கும். தற்போது இந்த சூத்திரத்தை கருத்தில் கொண்டு நடிகை கீர்த்தி சுரேஷ் தனது உடலை குறைத்து ஒல்லியாக மாறுகிறேன்னு சபதம் எடுத்து கொடுமையாக மாறியிருக்கிறார். 

 
மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவிட்டு கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு ஒல்லியாக மாறுகிறேன்னு உடல் எடையை குறைத்து அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் "என்னம்மா கீர்த்தி இப்படி பண்றீங்களேம்மா..உங்களுக்கு அழகே அந்த பப்லி லுக் தான். அதை கெடுத்திட்டு இப்படி ஆள் அடையாளம் தெரியாமல் ஆகிவிட்டீர்களே என புலம்பி தள்ளியுள்ளார். 
 
மேலும், மீண்டும் தமிழ் படங்களில் நடிக்கும் போது தயவுகூர்ந்து உடல் எடையை கூட்டி சகஜ நிலைக்கு திரும்புங்கள் எனவும் ரெக்யூஸ்ட் செய்துள்ளனர்.