1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 24 ஜூன் 2024 (21:46 IST)

அந்தரத்தில் பறக்கும் அஜித் கார்.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட மாஸ் வீடியோ..!

அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் அங்கு படமாக்கப்பட்ட கார் காட்சி ஒன்றின் வீடியோவை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
இந்த வீடியோவில் அஜித் மற்றும் ஆரவ் ஆகிய இருவரும் காருக்குள் இருக்கும் நிலையில் காரை அப்படியே ஒரு கிரைன் தூக்குகிறது, அதன் பின்னர் சுழற்றுகிறது, அதன் உள்ளே அஜித் மற்றும் ஆரவ், உண்மையாகவே டூப் இன்றி இருக்கும் நிலையில் அதன் பிறகு மீண்டும் இயல்பு நிலைக்கு கார் தரையில் வந்து இறங்குகிறது. 
 
இந்த காட்சியை படக்குழுவினர் வெற்றிகரமான படமாக்கிய பின்னர் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. படப்பிடிப்பு நடைபெறும் போது எடுத்த வீடியோவே பார்ப்பதற்கு மாஸாக இருக்கும் நிலையில் இந்த காட்சி திரையில் தோன்றும்போது எப்படி இருக்கும் என்பதை நினைத்து பார்க்கவே முடியவில்லை என்று இந்த வீடியோவுக்கு அஜித் ரசிகர்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர். 
 
Edited by Siva