வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 14 அக்டோபர் 2020 (11:05 IST)

நாஞ்சில் விஜயனை சட்டையைப் பிடித்து இழுத்து செல்லும் பெண் – அதிர்ச்சியளிக்கும் வீடியோ!

சில தினங்களுக்கு முன்னர் நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன் தன்னை சூர்யா தேவி தாக்கியதாக குற்றம் சாட்டியதை அடுத்து அது சம்மந்தமான சில வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

நடிகை வனிதா மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட நிலையில் அது குறித்து நாஞ்சில் விஜயன் மற்றும் சூர்யா தேவி ஆகியோர் கருத்து சொல்லி சர்ச்சைகளைக் கிளப்பி வந்தனர். வனிதா தன்னை விமர்சித்த ஒருவரையும் விட்டு வைக்காமல் நேரடியாக திட்டி தீர்த்தார். அதில் சூர்யா தேவி மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ள நிலையில் நாஞ்சில் விஜயன் இப்போது வனிதாவிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

இது சம்மந்தமாக வனிதா தன் சமூகவலைதளப் பக்கத்தில் ‘நாஞ்சில் விஜயன் எனக்கு போன் செய்து பேசினார். அவருக்கும் எனக்கும் எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டதே இல்லை. சூர்யாதேவிதான் அனைத்துக்கும் காரணமான குற்றவாளி. கஸ்தூரி சூழ்நிலையைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு விஜயனை உள்ளே இழுத்து விட்டார்’ எனக் கூறியுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டை சூர்யா தேவி மறுத்திருந்தார்.

இந்நிலையில் இப்போது நாஞ்சில் விஜயனை நள்ளிரவில் ஒரு பெண் சட்டையை பிடித்து இழுத்துச் சென்று ஆட்டோவில் ஏற்றி செல்வது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால் அந்த வீடியோவில் இருக்கும் பெண் சூர்யா தேவிதானா என்பது சரியாக தெரியவில்லை. இது சம்மந்தமான சிசிடிவி காட்சிகள் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.