நாஞ்சில் விஜயன் வீடு புகுந்து தாக்கிய சூர்யா தேவி – வைரலாகும் புகைப்படம்!

Last Modified திங்கள், 12 அக்டோபர் 2020 (12:21 IST)

நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன் தன் வீட்டுக்கு ரௌடிகளோடு வந்து சூர்யா தேவி தாக்கியதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

நடிகை வனிதா மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட நிலையில் அது குறித்து நாஞ்சில் விஜயன் மற்றும் சூர்யா தேவி ஆகியோர் கருத்து சொல்லி சர்ச்சைகளைக் கிளப்பி வந்தனர். வனிதா தன்னை விமர்சித்த ஒருவரையும் விட்டு வைக்காமல் நேரடியாக திட்டி தீர்த்தார். அதில் சூர்யா தேவி மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ள நிலையில் நாஞ்சில் விஜயன் இப்போது வனிதாவிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

இது சம்மந்தமாக வனிதா தன் சமூகவலைதளப் பக்கத்தில் ‘நாஞ்சில் விஜயன் எனக்கு போன் செய்து பேசினார். அவருக்கும் எனக்கும் எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டதே இல்லை. சூர்யாதேவிதான் அனைத்துக்கும் காரணமான குற்றவாளி. கஸ்தூரி சூழ்நிலையைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு விஜயனை உள்ளே இழுத்து விட்டார்’ எனக் கூறியுள்ளார்.

ஆனால் இப்போது நாஞ்சில் விஜயன் தன் சமூகவலைதள பக்கத்தில் ‘என்னது நான் மன்னிப்புக் கேட்டேனா?’ டிவீட் செய்து வனிதாவை கேலி செய்வது போல ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இதனால் முடிந்துவிட்டது என நினைத்த வனிதா நாஞ்சில் விஜயன் சண்டை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக இணையவாசிகள் கமெண்ட் செய்ய ஆரம்பித்துள்ளன. இந்த சர்ச்சை சில நாட்களாக அமைதியாகி இருந்த நிலையில் இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

நடிகர் நாஞ்சில் விஜயன் சூர்யா தேவி தன்னை வீடு புகுந்து ரௌடிகளுடன் சேர்ந்து தாக்கி மிரட்டியதாக சமூகவலைதளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் இது சம்மந்தமாக சூர்யா தேவி மேல் புகாரும் அளித்துள்ளார். இதனால் இப்போது சூர்யா தேவி விவகாரம் சூடு பிடித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :