’தளபதி 66’ திரைப்படத்தில் முன்னணி ஹீரோ வில்லனா?
தளபதி 66 திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கயிருக்கும் நிலையில் இந்த படத்தில் பிரபல ஹீரோ ஒருவர் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் தளபதி 66. குடும்ப சென்டிமென்ட் மற்றும் காமெடி அம்சங்கள் குறைந்த அளவில் ஆக்ஷன் கலந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பல முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டதாகவும் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் நானி இந்த படத்தில் வில்லனாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.