வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 31 டிசம்பர் 2020 (10:57 IST)

ஏம்மா பெட் ரூமுல எல்லாம் தூங்க மாட்டியா? வித்தியாசமா போஸ் கொடுக்குறாங்களாம்!

நடிகை நந்திதா ஸ்வேதா பாத் டப்பில் படுத்தபடி கவர்ச்சிகரமான போஸ் கொடுத்துள்ளார்.

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012 வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு விஜய் நடித்த புலி படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும் நடித்திருந்தார். ஆனால் இவரின் சினிமா கேரியரில் சிறந்த படமாக விஜய் சேதுபதியுடன் நடித்த “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா ” படம் அமைந்தது. அந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனதில் நிலைத்து நின்றார். ஆனால் அதன் பிறகு சொல்லிக்கொள்ளும் படி படங்கள் அமையவில்லை.

இதனால் எப்படியாவது வாய்ப்புகளை இழுக்க கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூகவலைதளங்களில் பதிவேற்றி வருகிறார். அதையடுத்து இப்போது பாத்ரூமில் பாத்டப்பில் நீட்டாக ட்ரஸ் அணிந்துகொண்டு படுத்தபடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஏன் பெட்ரூம்ல எல்லாம் இடம் இல்லையா? பாத்டப்பில் படுத்து இருக்கீங்க என கமெண்ட் செய்துள்ளனர்.