1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வியாழன், 6 ஏப்ரல் 2017 (13:33 IST)

நடிகை நந்தினி கணவர் சாவுக்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சி தகவல்கள்!

நடிகை மைனா நந்தினியின் கணவர் கார்த்திக் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன் கார்த்திகேயன் எழுதியுள்ள கடிதத்தில் எனது தற்கொலைக்கு தனது மனைவி நந்தினியின் தந்தைதான் காரணம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


 
 
இந்த சூழ்நிலையில் கணவர் மரணம் குறித்து நடிகை நந்தினி கூறியபோது, தனது கணவர் பலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி  ஏமாற்றியுள்ளார். மேலும் இரண்டு பெண்களை காதலித்து ஏமாற்றியுள்ளார் என்று குற்றம் சாட்டி, இனி அவரது முகத்தில்  போவதில்லை என்று கூறி இறந்த கணவர் உடலை பார்க்க செல்லாதது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
பல சந்தேகத்திற்கிடையில் தற்போது நந்தினி குறித்து பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் சமூக வலைதளங்களில்  தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது. நந்தினியின் கணவர் கார்த்திக் சாவுக்கு காரணம், நந்தினியின் முன்னாள் காதலன்தான் என கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு, நந்தினிக்கும் அவரது கணவருக்கும் சில கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது சமாதனம் செய்வதுபோல்   நுழைந்து தன்னுடைய பழைய காதலை புதுபித்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
 
ஒரு கட்டத்தில் இவர்களது நட்பு கார்த்திக்கு தெரிய வர, அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு தன்னுடைய அம்மா வீட்டுக்கு  சென்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து நந்தினியின் கணவர் பலமுறை கண்டித்தும், நந்தினி கேட்காததால் தான் ஏற்கனவே கார்த்திக் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளதாக விஷயம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். இது போன்று அதிர்ச்சி தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவுகிறது. போலீசாரின் முழுமையான விசாரணைக்கு பிறகு இது தொடர்பான முழுமையான தகவல் வெளிவரும்.