1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 18 மார்ச் 2021 (15:32 IST)

நந்தாவின் அறிமுகப்படத்துக்கு 5 கோடி செலவு செய்தேன்… பிரபல தயாரிப்பாளர் ஆதங்கம்!

பிரபல தயாரிப்பாளரான கலைப்புலி தாணு தான் அதிக பொருட்செலவில் தயாரித்த படம் பற்றி பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் புத்திசாலித்தனமாக படத்தை தயாரித்து அதை மார்க்கெட் செய்வதில் வல்லவர் கலைப்புலி தாணு. அவர் தன்னுடைய உறவினர் ஒருவரின் மகனான நந்தாவை சினிமாவில் அறிமுகப்படுத்த புன்னகைப் பூவே என்ற படத்தை எடுத்தார். அந்த படத்தை இயக்குனர் சபா கைலாஷ் இயக்கி இருந்தார். ஒரு அறிமுக நடிகரான நந்தாவின் படத்துக்கு கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் செலவு செய்தாராம் தானு. ஆனாலும் அந்த படம் வெற்றிப் பெறவில்லை.

ஆனால் அப்போது அவர் சூர்யா ஜோதிகா நடிப்பில் உருவான காக்க காக்க திரைப்படத்தை 2.5 கோடியில் எடுத்து வெற்றி பெற்றாராம்.