விஜய் சேதுபதி படத்துக்கு வாழ்த்து தெரிவித்த நமல் ராஜபக்சே – அதனால் மீண்டும் உருவான சர்ச்சை!

Last Modified வெள்ளி, 9 அக்டோபர் 2020 (17:05 IST)

நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க உள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செய்திகள் வெளிவந்தது. இந்த படத்தில் முத்தையா முரளிதரன் கேரக்டரில் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்தப் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என்று வெளிநாட்டு வாழ் இலங்கை தமிழர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் விஜய் சேதுபதி தரப்பிலிருந்து இந்த படத்தை பார்த்த பிறகு தங்களுடைய கருத்தை கூறுங்கள் என்று தெரிவித்ததாக தெரிகிறது


இந்நிலையில் இன்னும் சில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே இந்த படத்துக்கு ஆதரவாக டிவீட் ஒன்றை பகிர அதனால் இப்போது தமிழர்கள் மத்தியில் மேலும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :