1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 8 அக்டோபர் 2020 (13:24 IST)

முத்தையா முரளிதரன் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செய்திகள் வெளிவந்தது
 
இந்த படத்தில் முத்தையா முரளிதரன் கேரக்டரில் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்தப் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என்று வெளிநாட்டு வாழ் இலங்கை தமிழர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் விஜய் சேதுபதி தரப்பிலிருந்து இந்த படத்தை பார்த்த பிறகு தங்களுடைய கருத்தை கூறுங்கள் என்று தெரிவித்ததாக தெரிகிறது 
 
இந்த நிலையில் இந்த படம் தொடங்கப்படுமா அல்லது வெளிநாட்டு தமிழர்கள் எதிர்ப்புக்கு மரியாதை கொடுத்து நிறுத்தப்படுமா என்பது குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்தது 
 
இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தை தயாரிக்கும் மூவி ட்ரெயின் எம்பி என்ற நிறுவனம் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் முத்தையா முரளிதரன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிப்பது உறுதி என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஓரிரு நாட்களில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது