சமந்தா மாதிரி இருந்தால் தான் சினிமாவில் நிலைக்க முடியும் - பிரபல நடிகை வேதனை!

Papiksha Joseph| Last Updated: புதன், 23 ஜூன் 2021 (16:01 IST)

இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷி கண்ணா, தற்போது தமிழில் பிஸியான நடிகைகளுள் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கிறார். ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்திருந்தார். மேலும் இறுதியாக விஷாலுடன் அயோக்யா படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் விஜய் சேதுபதியுடன் "சங்கத் தமிழன்", தற்போது
‘கடைசி விவசாயி’
போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்தியில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் காபே’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ராஷி கண்ணா, அதன் பின்னர் தெலுங்கு, இந்தி,மலையாளம் என்று அதனை மொழி படங்களிலும் நடித்து ஆல் ரவுண்டு வருகிறார்.
டெல்லியை பூர்விகமாக கொண்ட இவர் தமிழ் சினிமாவிற்கு இவர் புதிது என்றாலும் நடித்ததெல்லாம் ஹிட் என்ற அளவிற்கு ராசியான நடிகையாகிவிட்டார் ராஷி கண்ணா.

இருந்தாலும் சினிமா துறையில் ஆணாதிக்கம் அதிகம் இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் வேதனையுடன் கூறியுள்ளார் ராஷி கண்ணா. மேலும் சமந்தா மற்றும் அனுஷ்கா மாதிரியான திறமையான நடிகையாக இருந்தால் மட்டுமே சினிமாவில் நிலைத்து இருக்க முடியும். அவர்கள் இருவரும் தென்னிந்திய நடிகைகள் பிம்பத்தை உடைத்து திறமையான நடிகையாக மக்களை கவர்ந்துள்ளனர் என கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :