1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 23 அக்டோபர் 2024 (13:50 IST)

நிஜ வாழ்க்கையில் நான் ஸ்பையாக இருந்திருக்க வேண்டும்… ஆனால் தவறு செய்துவிட்டேன் – சமந்தா!

சமந்தா, பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இது ஏற்கனவே பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான சிட்டாடல் தொடரின் மேலோட்டமான ரீமேக் என சொல்லப்படுகிறது. இந்த தொடரில் கதாநாயகனாக வருண் தவான் நடித்து வருகிறார்.

இந்த தொடரில் ஆக்‌ஷன் மற்றும் கிளாமர் காட்சிகளில் அதிகமாக நடிக்க உள்ளாராம் சமந்தா. அதனால் அவருக்கு வழக்கமாக வாங்கும் சம்பளத்தை விட இருமடங்காக 10 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த தொடர் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் சமந்தா ஊடகங்களுக்கு நேர்காணல் கொடுத்து வருகிறார்.

அதில் “இந்த தொடரில் அவர் Spy ஆக நடித்துள்ளது போல நிஜ வாழ்க்கையில் யாருக்காவது Spy ஆக இருந்துள்ளாரா “ என்ற கேள்விக்குப் பிறகு பதிலளித்துள்ளார். அதில் “நான் நிஜவாழ்க்கையில் Spy ஆக இருக்க வேண்டிய தேவை இருந்தது. ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை. அது என்னுடைய தவறுதான்” எனக் கூறியுள்ளார்.