1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 14 டிசம்பர் 2022 (13:50 IST)

50 வயது தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகள்! மேகாலயா ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

marriage3
50 வயது தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகள்! மேகாலயா ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!
மேகாலயா மாநிலத்தில் 50 வயது தாய்க்கு அவரது மகள் திருமணம் செய்து வைத்த நெகிழ்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மேகாலய மாநிலத்தில் 25 வயது வயதில் கணவனை இழந்த பெண் ஒருவர் வேறு திருமணம் செய்ய மறுத்து தனது மகளுக்காக வாழ்ந்தார். தற்போது அந்த பெண்ணுக்கு 50 வயது ஆகியிருக்கும் நிலையில் அவரது மகள் தனது தாய்க்கு மறுமணம் செய்து வைத்துள்ளார். 
 
தந்தை உயிரிழந்த போது தனக்கு இரண்டு வயது என்றும், தன்னை வளர்ப்பதற்காக தாய் பெரும் கஷ்டப்பட்டார் என்றும் இந்த திருமணத்தின் மூலம் அவர் கவலைகளில் இருந்து மீண்டு இனி சந்தோசமாக இருப்பார் என்றும் அவரது மகள் தெரிவித்துள்ளார் 
 
தான் திருமணமாகிச் சென்ற உடன் தனது தாய் தனியாக இருப்பார் என்ற காரணத்திற்காகவே அவருக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் அவரது மகள் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran