ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Updated : சனி, 10 ஜூன் 2017 (10:28 IST)

காலா படத்தில் வில்லன் நடிகர் யார் தெரியுமா?

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் காலா படத்தில் பாலிவுட் நடிகர் நானா படேகர் வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


 

 
இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் காலா. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் நடந்தது. இதில், தமிழர்களுக்காக பாடுபடும் வேடத்தில் ரஜினி நடிக்கிறார். 

 
இந்நிலையில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் நடிகர் பற்றிய தகவல் இதுவரை தெரியாமல் இருந்தது. ஆனால், தற்போது பாலிவுட் நடிகர் நானா பாடேகர் வில்லன் வேடத்தில் நடிக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.


 

 
அவருக்கு, அரசியல்வாதி வேடமாம். மும்பை மக்களுக்கு மட்டும்  தேவைப்படுவதை செய்து கொடுக்கும் நானா படேகர், அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யாமல் ஒதுக்கி வைப்பாராம். அதைக்கண்டு கொதித்தெழும் ரஜினி, அவரை எதிர்த்துப் போராடுகிறார். 
 
இந்தக் காட்சிகள்தான் சமீபத்தில் படமாக்கப்பட்டன. தொடர்ச்சியாக 11 நாட்கள் நடித்த ரஜினி, இந்த ஷெட்யூலில் தன்னுடைய போர்ஷன் முடிந்துவிட்டதால் சென்னைக்குத் திரும்பிவிட்டார். மற்ற நடிகர்களை வைத்து ஷூட்டிங்கைத் தொடர்ந்து வருகிறார் பா.இரஞ்சித். சென்னையில் தொடங்க இருக்கும் அடுத்த ஷெட்யூலில் இணைந்து கொள்கிறார் ரஜினி.