1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 15 அக்டோபர் 2022 (09:02 IST)

ராஜமௌலியின் பழைய படத்தைப் பார்த்து ரசித்த அமெரிக்க ரசிகர்கள்!

இயக்குனர் ராஜமௌலி இதுவரை தொட்டதெல்லாம் ஹிட்தான். அதுபோல தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் எல்லோருக்கும் அவர் ஹிட் கொடுத்துவிட்டார். இன்னும் மகேஷ் பாபுவோடு மட்டும் இணையவில்லை. இந்நிலையில் ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு இருவரும் இணைய இருக்கின்றனர். இந்த படம் புதையலைத் தேடி செல்லும் ஒரு சாகச திரைக்கதையாக அமையும் என சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில் அவர் கடைசியாக இயக்கிய ஆர் ஆர் ஆர் படத்தினை பல பிரிவுகளில் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்துள்ள நிலையில் அந்த படத்தை ப்ரமோட் செய்ய அங்கு சென்றுள்ள ராஜமௌலி அங்கு பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு வருகிறார்.

இந்நிலையில் அங்கு நடைபெற்ற ஒரு திரையிடலில் ராஜமௌலி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான நான் ஈ (ஈகா) திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. அதை பார்த்து மகிழ்ந்த ரசிகர்கள் கிளைமேக்ஸ் காட்சியில் கைதட்டி உணர்ச்சி வசப்பட்டு ரசித்துள்ளனர். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.