விஜய் சேதுபதிக்கு எச்சரிக்கை விடுத்த நாம் தமிழர் கட்சி…

Sinoj| Last Modified செவ்வாய், 12 ஜனவரி 2021 (22:39 IST)


விஜய் சேதுபதி நடிப்பில் தீன தயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் துக்ளக் தர்பார். இப்படத்தில் அரசியல் நெடி அதிகமிருப்பதா தகவல் வெளியான நிலையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் அதை உறுதி செய்தது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் கொடியை ராசிமான் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள பார்திபன் கிழிப்பது போன்ற காட்சி அக்கட்சியினரை கொதிப்படையச் செய்தது.

இதற்கு நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்குமரன் விஜய் சேதுபதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழஒரு அறிக்கை வெளியிட்டுள்ளா சீமான். அதில், நாம் தமிழர் கட்சி 10 ஆண்டுகளாக
இளைஞர்கள் தங்களின் வாழ்க்கையைத் தொலைத்து, பொருளாதாரத்தை இழந்து இக்காட்சிக்கு உழைத்து வருகின்றனர். இந்நிலையில்
துக்ளக் தர்பார் படத்தின் முன்னோட்ட காட்சியில் வெளியான காட்சிகள் சீமானுக்கு எதிரானதுபோலவும் கட்சியின் கோட்பாடுகளைக் களங்கப்படுவதுபோல் உள்ளது. இதுகுறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமாரிடம் கேட்டபோது, சிஜி தொழில்நுட்பத்தின் உதவியால் அதை நீக்குவதாகக் கூறியுள்ளார். ஆனால் இதுபோன்ற காட்சியில் நடித்தவர்களைக் கண்டிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் விஜய்சேதுபதி, பார்த்திபன் ,மஞ்சிமா மோகன் மற்றும் ராஷிகண்ணா ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைத்து உள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக அடுத்த புத்தாண்டு அல்லது பொங்கலில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகிறது.இதில் மேலும் படிக்கவும் :