வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 11 நவம்பர் 2022 (15:10 IST)

அவ்ளோ செலவு பண்ணி எடுத்தும் பயன் இல்லை… நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடந்த வீண் செலவு!

நாய் சேகர் படத்துக்காக பிரபுதேவா நடன வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட பாடல் படம் முடிந்த பின்னரே இடம்பெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ஷூட்டிங் மொத்தமாக நிறைவு பெற்றுள்ளது. இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார் பிரபுதேவா. இந்த பாடலுக்காக சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டதாம். கதைக்கு சம்மந்தமே இல்லாத பாடலை வடிவேலுவின் வற்புறுத்தலால்தான் எடுத்தார்களாம்.

இந்நிலையில் இந்த பாடலை இப்போது படத்தின் கிளைமேக்ஸ் காட்சி முடிந்ததும், அதன் பின்னர்தான் வைத்துள்ளார்களாம். பெரும்பாலான ரசிகர்கள் படம் முடிந்ததும் எழுந்து சென்றுவிடுவார்கள். அதனால் இந்த பாடலுக்காக செய்த செலவு வீண்தான் என்று தயாரிப்பு தரப்பு புலம்பி வருவதாக சொல்லப்படுகிறது.