1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (15:25 IST)

தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம்!

தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்போது பேன் இந்தியா முழுவதும் கால்பதிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் ரிலீஸான புஷ்பா மற்றும் சிரஞ்சீவியின் காட்பாதர் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்கள் மற்றும் முன்னணி இயக்குனர்களின் படங்களை தயாரித்து வருகிறது மைத்ரி மூவி மேக்கர்ஸ்.

இந்நிலையில் இப்போது தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் கால்பதிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு முன் தொகை கொடுத்து ஒப்பந்தம் செய்து வருவதாக சொல்லப்படுகிறது.