திருமண நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி- விஜயகாந்த்
தமிழ் சினிமாவில் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கட்சித் தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் விஜயராஜ் என்ற பெயரில் சினிமாவில் அறிமுகமான அவரை இயக்குனர் கஜா, விஜயகாந்த் என்று மாற்றிவைத்தார்.
கடந்த 1978 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய அவர், 156 படங்களில் நடித்துள்ளார்.
80 கள், 90 களில் முன்னணி நடிகராக இருந்த விஜயகாந்த்தின் நூறாவது படம் கேப்டன் பிரபாகரன் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியானது.
தொடர்ந்து ரமணா, கள்ளழகர், நரசிம்மா என்று பல ஹிட் படங்கள் கொடுத்தார்.
அதன்பின், அரசியலில் நுழைத்து தேமுதிக கட்சியைத் தொடங்கி, குறுகில காலத்தில் எதிர்க்கட்சித் தலைவரானார்.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று, விஜயகாந்த்- பிரேமலதா விஜயகாந்தின் திருமண நாளை முன்னிட்டு அவருக்கு கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள், ரசிகர்கள், சினிமாத்துறையினர், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், விஜயகாந்த் தன் டுவிட்டர் பக்கத்தில், திருமண நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.