1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Modified: புதன், 14 மார்ச் 2018 (18:50 IST)

பிரபல பாலிவுட் நடிகர் மாரடைப்பால் மரணம்...

பிரபல பாலிவுட் நடிகர் நரேந்திர ஜா மாரடைப்பால் இன்று மரணமடைந்தார். இந்த செய்தி பாலிவுட் பிரபலங்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
55 வயதான நரேந்திர ஜா, தொலைக்காட்சி தொடர்கள், படங்கலீல் நடித்து வந்தார். ஷாருக்கானின் ரயீஸ், ரித்திக் ரோஷனின் காபில் உள்ளிட்ட படங்களிலும், பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படத்திலும் நடித்துள்ளார்.
 
இவர் மும்பைக்கு அருகே உள்ள வாத பகுதியில் இருக்கும் இவரது பண்ணை தோட்டத்தில் இவரது மனைவியுடன் இருந்தார். அப்போது திடீரென இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
 
ஆனால், மருத்துவர்கள் பரிசோதித்து இவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த செய்தி பாலிவுட் பிரபலங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நரேந்திர ஜாவிற்கு ஏற்கவே இரண்டு முறை மாரடைப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.