வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 25 பிப்ரவரி 2019 (12:05 IST)

ஆரம்பிச்சுட்டாங்க என் மனைவி .! இனிமேல் உங்களுக்கு பஃன் தான்.! ட்வீட் செய்த தனுஷ்.!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் சிறந்த நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். குழந்தைகள் முதல் பெரியோர்வரை எல்லோருக்கும் பிடித்தவரான தனுஷ் தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட் , ஹாலிவுட்  என ஆல் ரவுண்ட் அடித்துவிட்டார். நடிப்பையும் தாண்டி ஹாலிவுட் பாடகராகவும், கவிஞராகவும் தனது திறமையை நிரூபித்துள்ளார் நடிகர் தனுஷ். 


 
கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினியின் மகள்  ஐஸ்வர்யாவை   திருமணம் செய்துகொண்டார் . பிறகு  இவர்கள் இருவருக்கும் யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் பிறந்தனர். 
 
இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா தனுஷ் அண்மையில் புதிதாக இன்ஸ்டகிராம் கணக்கு ஒன்றை துவங்கியுள்ளார் . அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த தனுஷ்,  என் மனைவி இன்ஸ்டாகிராமில் வந்துட்டாங்க இனிமேல்  உங்களுக்கு பஃன்  தான் என்று ட்வீட் செய்துள்ளார்.