1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 16 பிப்ரவரி 2019 (18:07 IST)

புல்வாமா தாக்குதலை பாராட்டிய பன்னாட்டு நிறுவன ஊழியர் பணியிடை நீக்கம்!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பாதுகாப்பு படையினர் 40  பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த கோர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. 


 
உலகையே உலுக்கிய இந்த தாக்குதல் குறித்து  ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்த ரியாஸ் அகமது வானி, எனும் மெக்லியோடஸ் பன்னாட்டு நிறுவனத்தின் ஊழியர்,  தனது ஃபேஸ்புக் பக்கத்தில் "இதுவல்லவோ சர்ஜிக்கல் ஸ்டிரைக்" என பாராட்டி சர்ச்சையான கருத்தை  குறிப்பிட்டிருந்தார்.
 
இவரின் இந்த சர்ச்சைக்குரிய பதிவு அவர் பணிபுரியும் நிறுவன நிர்வாகத்தின் கவனத்துக்கு செல்ல . அந்நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தேச விரோத கருத்துகள் கொண்டுள்ளவர்களை ஏன் பணியில் வைத்துள்ளீர்கள் என பிறர் சரமாரியாக கேள்வி கேட்டுள்ளனர். 
 
எனவே, தேசத்துக்கு விரோதமான தங்களின் இக்கருத்து குறித்து ஒரு வாரத்துக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் மேலும் அந்த விளக்கம்  நிறுவனத்துக்கு ஏற்புடையதாக இல்லாதபட்சத்தில் தாங்கள் பணிநீக்கம் செய்யப்படுவீர்கள் எனத் தெரிவித்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


 
முன்னதாக, புல்வாமா தாக்குதலை வரவேற்று ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்த, என்டிடிவியின் இணையதள செய்திப் பிரிவின் துணை செய்தி ஆசிரியர் நிதி சேத்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.